Posts

Showing posts from November, 2021

முருகப்பெருமானின் 2 படை வீடுகளை இணைக்கும் வகையில்

முருகப்பெருமானின் 2 படை வீடுகளை இணைக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமலுக்கு வருகிறது தென்னக ரயில்வே அதிகாரிகள் முழுவீச்சில் மும்முரம் தமிழகத்தில் சங்கம் வளர்த்த மதுரை, 4-வது பெரிய மாவட்டம் ஆகும். இது 3710 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 4 வருவாய் கோட்டங்கள், 11 தாலுகாக்கள், 9 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 420 ஊராட்சிகள், 655 வருவாய் கிராமங்கள் ஆகியவை அமைந்து உள்ளன. இங்கு 32 லட்சத்து 10 ஆயிரத்து 442 பேர் வசிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சோழவந்தான், மதுரை சந்திப்பு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி ஆகிய 6 நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து உள்ளது. ஆனாலும் மேற்கண்ட வழித்தடங்களில் பெரும்பாலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இது பயணிகளின் அன்றாட போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. எனவே இங்கு வசிக்கும் பொதுமக்கள் முழுக்க முழுக்க சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் இங்கு உள்ள சாலைகள் மிகவும் குறுகலானவை. எனவே மதுரை மாவட்டத்தில் சதா நேரமும் போக்...